சுடச்சுட

  
  petrol_+_diesel

  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை ரூ.2.91 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
  இதன்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.43-ல் இருந்து, ரூ.69.28 ஆகவும், டீசல் விலை ரூ.62.48-ல் இருந்து ரூ.58.82 ஆகவும் குறைந்துள்ளது. எனினும், உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப விலையில் சிறிய மாற்றம் இருக்கும்.
  சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
  சமீப நாள்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இந்நிலையில், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai