சுடச்சுட

  

  மகாராஷ்டிர சட்ட மேலவையை கலைக்கும் திட்டமில்லை: ஃபட்னவீஸ்

  By DIN  |   Published on : 01st April 2017 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  devendrafadnavis

  மகாராஷ்டிர சட்ட மேலவையை கலைக்கும் திட்டமில்லை என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
  முன்னதாக, மகாராஷ்டிர சட்ட மேலவையைக் கலைக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ அனில் கோட்டே கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சட்ட மேலவையில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:
  மகாராஷ்டிர மேலவை, போற்றிப் புகழத்தக்க வரலாறு கொண்டது. மாநில மக்கள் நலன் தொடர்புடைய பல்வேறு விவகாரங்கள் இந்த அவையில் விவாதிக்கப்படுகின்றன. இந்த அவையின் மீது மாநில அரசு மிகுந்த மதிப்பு கொண்டுள்ளது.
  அரசின் பிரதிநிதி என்ற முறையில் மட்டுமின்றி தனிப்பட்ட அளவிலும் கோட்டேவின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை மீண்டும் வெளியிட வேண்டாம் என்று அவரை கேட்டுக் கொள்கிறேன். மகாராஷ்டிர சட்ட மேலவையின் மாண்பை, மாநில அரசு கட்டிக் காக்கும் என்றார் ஃபட்னவீஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai