சுடச்சுட

    

    மதரஸா கல்வி வாரிய பாடத்தில் மோடியின் வாழ்க்கைக் குறிப்பு

    By DIN  |   Published on : 01st April 2017 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்தியப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கான மதரஸா கல்வி வாரியம் சார்பில் வெளியாகும் பாடத்திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கைக் குறிப்பு இடம்பெறவுள்ளது.
    இதுதொடர்பாக, மத்தியப் பிரதேச மதரஸா கல்வி வாரியத் தலைவர் சையது இமாத் உதீன் பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    மதரஸா கல்வி வாரியம் சார்பில் வெளியாகவுள்ள புதிய பாடத்திட்டத்தில் "இஸ்லாம் மதத்தில் தேசப்பற்றின் பங்கு' குறித்த விரிவான குறிப்புகள் இடம்பெறும்.
    மேலும், பிரதமர் மோடி, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆஸாத், ஜன சங்கத்தின் முன்னோடித் தலைவர்களுள் ஒருவரான தீனதயாள் உபாத்யாய, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்டோர் அவர்தம் வாழ்வில் சந்தித்த போராட்டங்கள், படைத்த சாதனைகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்புகள் பாடத் திட்டத்தில் இடம்பெறும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai