சுடச்சுட

  
  parliamentofindia

  மாநிலங்களவைக்கு சனிக்கிழமை முதல் (ஏப்ரல் 1) நான்கு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  மாநிலங்களவை வெள்ளிக்கிழமை கூடியதும் துணைத் தலைவர் பி.ஜே,.குரியன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். "ராம நவமியையொட்டி மாநிலங்களவைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) விடுமுறை என்பதால் அதையொட்டி திங்கள்கிழமையும் விடுமுறை விடப்படுகிறது' என்று அவர் அறிவித்தார். ஏற்கெனவே சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழக்கமான விடுமுறை என்பதால் மேற்கண்ட தினங்களையும் சேர்க்கும்போது தொடர்ச்சியாக நான்கு நாள்களுக்கு மாநிலங்களவைக்கு விடுமுறை விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

  குரியனுக்கு பிறந்த நாள் வாழ்த்து: இதனிடையே, மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியனின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.

  எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவாறே "இனிய பிறந்த நாள் வாழ்த்து' என்று ஆரவாரத்துடன் தெரிவித்தனர். அவர்கள் மேஜைகளைத் தட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  அதை ஏற்றுக் கொண்டு பி.ஜே.குரியன் கூறுகையில், "நான் இப்போது ஒரு ரகசியத்தை சொல்லப் போகிறேன். நான் இதுவரை எனது பிறந்த நாளைக் கொண்டாடியதே இல்லை.

  ஆனால் நீங்கள் இன்று இதை ஒரு கொண்டாட்டமாக மாற்றி விட்டீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி' என்று தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai