சுடச்சுட

    

    ""உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "நமாஸ்' செய்ய முன்வருவரா?'' என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கான் கேள்வியெழுப்பினார்.
    "சூரிய நமஸ்காரமும், முஸ்லிம்களின் நமாஸ் வழிபாடும் ஒரே மாதிரியானவை' என்று ஆதித்யநாத் கூறியதையடுத்து, ஆஸம் கான் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
    உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் செய்தியாளர்களிடம் ஆஸம் கான் மேலும் கூறியதாவது:
    சூரிய நமஸ்காரத்துக்கும், நமாஸýக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை யோகி ஆதித்யநாத் கண்டுபிடித்துவிட்டார். எனவே, நமாஸ் செய்வதற்கு அவர் முன்வருவாரா? என்று கேட்கிறேன்.
    சூரிய நமஸ்காரத்துக்கும், நமாஸýக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதாக எந்த அடிப்படையில் யோகி ஆதித்யநாத் கூறினார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது கருத்தின் உள்நோக்கம் என்னவென்றும் தெரியவில்லை.
    ஆதித்யநாத் நமாஸ் செய்வதை யாரும் தடுக்க மாட்டார்கள் என்று ஆஸம் கான் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai