சுடச்சுட

  

  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்

  By DIN  |   Published on : 01st April 2017 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farm

  தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகளை சந்தித்த தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பிய விவசாயிகள்.

  தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மாநில நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
  இது குறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது.
  தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிடவில்லை. அவர்களது கோரிக்கைகளான காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகளை இணைப்பது, காப்பீட்டு நிறுனவனங்களிடம் இருந்து பயிர்க் காப்பீடு பெற்றுத் தருவது ஆகியவை மத்திய அரசின் வரம்பின் கீழ் வருகிறது.
  தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துவோர் யாரும் கைது செய்யப்படவில்லை. சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததால் அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக யார் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை.
  தமிழக வறட்சி நிவாரணமாக ரூ.39 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டது. ஆனால், ரூ.1,840 கோடிதான் வழங்கப்பட்டது.
  நிலுவைத் தொகையை பெற்றுத் தர மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்தால் நல்லது. அப்படிச் செய்தால் தில்லியில் போராடி வரும் விவசாயிகள் தமிழகம் திரும்பிவிடுவர். 14-ஆவது நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வர வேண்டிய வருவாய் மாற்றியமைக்கப்பட்டதால், தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதையும் பெற்றுத் தருமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மத்திய அரசின் பங்காக தமிழகத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி வர வேண்டியுள்ளது.
  அதையும் விரைந்து வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. அதைப் பரிசீலிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளார் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.


  விவசாயிகள் கேள்வி

  தில்லியில் நடைபெற்று வரும் தங்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடத்துவோரை மாநிலக் காவல் துறை கைது செய்வது ஏன்? என்று தங்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரிடம் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
  தில்லிக்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை வெள்ளிக்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது சில விவசாயிகள், "தில்லியில் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறும் நீங்கள், எங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுவோரை மாநிலக் காவல் துறை கைது செய்
  வதை ஏன் தடுக்கவில்லை?' என்று கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai