சுடச்சுட

  
  nitish_kumar

  ஆறுகளில் படியும் வண்டல் மண்ணை தூர்வாருவதற்கு, தேசிய அளவிலான கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
  உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் முதல் மேற்கு வங்க மாநிலம், ஹால்டியா வரை, கங்கை நதியில் தேசிய நீர்வழித்தடம் அமைக்கப்படவிருக்கிறது. இந்த நீர்வழித்தடத்தின் பெரியதொரு பகுதி பிகாரில் அமையவிருக்கிறது.
  இந்நிலையில், பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரை சனிக்கிழமை சந்தித்த தேசிய உள்நாட்டு நீர்வழித்தடங்கள் ஆணைய (ஐடபிள்யுஏஐ) அதிகாரிகள், நீர்வழித்தட திட்ட மாதிரியை அவரிடம் வழங்கினர்.
  அப்போது, நிதீஷ் குமார் பேசியதாவது: கங்கையாற்றில் படியும் வண்டல் மண் காரணமாக, நீரோட்டம் தடைபடுவதுடன், ஆற்றின் பரப்பும் சுருங்கி வருகிறது. ஆறுகளில் படியும் வண்டல் மண்ணை தூர்வாருவதற்கு, தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல், நீர்வழித்தட திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது.
  கங்கை நதியை பொருத்தவரை, வண்டல் படிவை தூர்வாரி, நீரோட்டம் தங்கு தடையின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் நிதீஷ் குமார்.
  மேலும், பிகாரில் கங்கை நதியின் தற்போதைய நீரோட்ட நிலவரத்தை, ஐடபிள்யுஏஐ அதிகாரிகள் வான்வழியாக சென்று பார்வையிடுவதற்கு நிதீஷ் குமார் ஏற்பாடு செய்துகொடுத்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai