சுடச்சுட

  

  உத்தரப் பிரதேசத்தில் இறைச்சி விற்பனையாளர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம், மாநில அரசுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கைவிடப்பட்டது.
  இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம்போல இறைச்சிக் கூடங்கள் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த இறைச்சிக் கூடங்களை மூடுவதாக அதிரடியாக அறிவித்தார். இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்த மாநில இறைச்சி விற்பனையாளர்கள் கடந்த சில நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
  இந்நிலையில், இறைச்சி விற்பனையாளர்களுடன் மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
  இதுகுறித்து இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி குரேஷி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசிடம் எங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். மூடப்பட்ட சில இறைச்சிக் கூடங்களைத் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அவற்றை கனிவுடன் கேட்ட அரசு அதிகாரிகள் எங்களது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றித் தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், வேலைநிறுத்தப்
  போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai