சுடச்சுட

  

  ஏர்-இந்தியா ஊழியரை தாக்கிய சிவசேனை எம்.பி.யின் பயணச்சீட்டை ரத்து செய்தது ஸ்பைஸ்ஜெட்

  By DIN  |   Published on : 02nd April 2017 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏர்-இந்தியா விமான நிறுவன ஊழியரை தாக்கிய சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தங்கள் விமானத்தில் பயணிப்பதற்காக பதிவு செய்திருந்த பயணச்சீட்டை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் ரத்து செய்தது.
  ஏர்-இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்களுக்கு பிறகு, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனமும் ரவீந்திர கெய்க்வாடுக்கு தங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.
  இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
  மகாராஷ்டிர மாநிலம், புணேவிலிருந்து குஜராத் மாநிலம், ஆமாதாபாதுக்கு வரும் திங்கள்கிழமை செல்வதற்காக ரவீந்திர கெய்க்வாட் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார்.
  அந்தப் பயணச்சீட்டை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரத்து செய்துவிட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  முன்னதாக, கடந்த மாதம் 23-ஆம் தேதி பிஸினஸ் வகுப்பில் முன்பதிவு செய்திருந்த தனது இருக்கையை எக்கானமி வகுப்புக்கு மாற்றியதால் ஆத்திரமடைந்த ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரை காலணியால் தொடர்ந்து அடித்தார். இந்தச் சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் விமான நிறுவனங்கள் ரவீந்திர கெய்க்வாடுக்கு தங்கள் விமானங்களில் பயணிப்பதற்கு தடை விதித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai