சுடச்சுட

  

  ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை: நிதின் கட்கரி

  By DIN  |   Published on : 02nd April 2017 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  NitinGadkari

  நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
  இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
  நாட்டில் இருக்கும் ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை. மின்னணு நிர்வாகம் முறையில் ஓட்டுநர் உரிமங்கள் தற்போது இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
  நாட்டில் யார்-யாரிடம் ஓட்டுநர் உரிமங்கள் இருக்கிறது என்பது தொடர்பான விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர், மற்றோர் இடத்தில் போலியான ஓட்டுநர் உரிமங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், பெரிய வாகனமாக இருந்தாலும் சரி, சிறிய வாகனமாக இருந்தாலும் சரி, வாகனத்தை ஓட்டும் தேர்வில் தேர்வானால் மட்டுமே உரிமம் பெற முடியும்.
  நாடு முழுவதும் 28 ஓட்டுநர் தேர்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுபோல் மேலும் 2 ஆயிரம் மையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளது. அதேபோல், வாகன ஓட்டுநர் தேர்வு முடிந்து 3 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு ஓட்டுநர் உரிமத்தை ஆர்டிஒ வழங்க வேண்டும். இந்த கால வரம்புக்குள் ஓட்டுநர் உரிமத்தை ஆர்டிஒ அளிக்கவில்லையெனில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையில் ஊழலை முடிவுக்கு கொண்டு வரவும், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
  சாலையில் போக்குவரத்து மிக்க பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் அப்பகுதியில் போலீஸாரின் தேவை குறைகிறது. சாலை விபத்துகளில் நேரிடும் மரணங்களில் 50 சதவீத உயிரிழப்புகளுக்கு சாலைகளை அமைத்த பொறியாளர்கள்தான் காரணம் என்று நிதின் கட்கரி கூறினார்.
  2016-ஆம் ஆண்டு மோட்டார் வாகனங்கள் (திருத்த) மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை தனது ஒப்புதலை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai