சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரை மலேசியப் பிரதமர் நஜீப் ரஜாக் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
  இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறைப் பயணமாக ரஜாக் வந்துள்ளார். சென்னையில் இருந்து தனது இந்தியப் பயணத்தை முதலில் அவர் தொடங்கினார். இதையடுத்து தில்லிக்கு சனிக்கிழமை சென்றார். தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த ரஜாக்கை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். அப்போது அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதையடுத்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி ஆகியோரை ரஜாக் சந்தித்துப் பேசினார். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று ரஜாக் மரியாதை செலுத்தினார்.
  தனது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ரஜாக் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai