சுடச்சுட

  

  ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கோட்டுப் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படை இளநிலை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இருக்க வாய்ப்புள்ளதால், அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: மணிப்பூரைச் சேர்ந்தவர் சனாய்மா கோம். பாதுகாப்புப் படை இளநிலை அதிகாரியான அவர், ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கோட்டுப் பகுதியில் பணியாற்றி வந்தார். தனது குடும்பத்தினருடன் பூன்ச் மாவட்டத்தில் வசித்து வந்த கோம், வழக்கமான பாதுகாப்புப் பணிகளில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தார்.
  அப்போது அப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு ராணுவ மருத்துவ முகாமில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
  எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதலாக இந்தச் சம்பவம் இருக்கலாம் என்பதால், அதுதொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai