சுடச்சுட

  
  veeraraghavatemple

  படப்பிடிப்பையொட்டி திருவள்ளூர் வீரராகவர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததால் வெளியே காத்திருந்த பக்தர்கள்.

  திருவள்ளூர் வீரராகவர் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின் போது பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் தள்ளியும், விரட்டியும் விடப்பட்டதால் கோயிலுக்கு வந்தவர்கள் அவதிக்குள்ளாயினர்.
  திருவள்ளூர் வீரராகவர் கோயிலில், சனிக்கிழமை சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், "தானாக சேர்ந்த கூட்டம்' என்ற சினிமாவின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் கதாநாயகன்
  சூர்யாவும், கதாநாயகி கீர்த்தி சுரேஷும் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர்களைப் பார்க்க ரசிகர்கள் காலை முதலே கோயில் குளம் அருகில் திரண்டனர்.
  இதனால் போலீஸார் பஜார் வீதியில் இருந்து வரும் வாகனங்களை முகம்மது அலி தெரு வழியாகத் திருப்பி விட்டனர். பனகல் தெரு வழியாக குளக்கரை சாலைக்கு சென்று பஜார் வீதிக்குச் செல்லும் வாகனங்களையும் காமராஜர் சிலை வழியாகத் திருப்பி விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  இந்நிலையில், படப்பிடிப்பு குழுவினருடன் அடியாள்களைப் போல் வந்த நபர்கள் ரசிகர்கள், பக்தர்கள் என வித்தியாசம் தெரியாமல் கூட்டத்தினரை தள்ளி
  விட்டனர்.
  புதிதாக கோயிலுக்கு வரும் நபர்களுக்கு, கோயிலுக்குள் செல்ல மாற்று வழி கூட சொல்லாமல் படப்பிடிப்பு குழுவினர் விரட்டியதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
  விரட்டியவர்களுக்கு உதவியாக போலீஸார் செயல்பட்டதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
  படப்பிடிப்பையொட்டி திருவள்ளூர் வீரராகவர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததால் வெளியே காத்திருந்த பக்தர்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai