சுடச்சுட

    

    ""சிறுமிகளை (18 வயதுக்குக் குறைவான பெண்களை) பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்'' என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
    போபாலில் மாநில போலீஸ் அகாதெமியின் 89-ஆவது அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது. இதில், சிவராஜ் சிங் சௌஹான் பங்கேற்றுப் பேசியதாவது: மத்தியப் பிரதேசத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
    இதுதொடர்பான மசோதா எதிர்வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அது அனுப்பி வைக்கப்படும். பெண்கள் குறிப்பாக மாணவிகள், பணிக்குச் செல்லும் மகளிர் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்யும்பொருட்டு அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
    பெண்கள் எவ்வித அச்சமுமின்றி, வெளியே சுதந்திரமாக நடமாடுவதற்கேற்ற சூழலை போலீஸார் உருவாக்க வேண்டும். மேலும், பெண்களுக்கு எதிராகச் செயல்படும் சமூக விரோத சக்திகள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம் பெண்களை கேலி செய்பவர்களை சீர்திருத்தவே விரும்புகிறோம். பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. நாகரிக சமுதாயத்துக்கு இத்தகைய நபர்கள் ஏற்புடையவர்கள் அல்ல.
    பெண்களுக்குத் தொந்தரவு தருவோருக்கு எதிரான பிரசாரம் விரைவில் தொடங்கப்படும் என்றார் சிவராஜ் சிங் சௌஹான்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai