சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்

  By DIN  |   Published on : 02nd April 2017 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  security

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பியோடியதைத் தொடர்ந்து அங்குள்ள அரசுக் கட்டடம் ஒன்றில் தேடுதல் வேட்டை நடத்தும் வீரர்கள

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
  ஸ்ரீநகரின் பரிம்போரா பகுதியில் இருந்து பந்தாசௌக் பகுதிக்கு ராணுவ வாகனங்கள் சனிக்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தன. ஸ்கிம்ஸ் மருத்துவமனை அருகே அந்த வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் பகல் 1.15 மணியளவில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கடைசி வாகனத்தில் இருந்த இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
  இதற்குப் பதிலடியாக, ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இத்தாக்குதலுக்குப் பிறகு, அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது சில விஷமிகள் கல்வீச்சில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் தொடங்கியுள்ளன' என்றார்.
  சந்தையில் துப்பாக்கிச்சூடு?: இதனிடையே, ஸ்ரீநகரின் முக்கியமான சந்தைப் பகுதியான லால் சௌக் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
  துப்பாக்கிச்சூடு சத்தத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பாதசாரிகள் பத்திரமான இடங்களை நோக்கி ஓடினர்.
  "துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், "லால் சௌக் பகுதியில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டதாகக் கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்தவே போலீஸார் வானத்தை நோக்கிச் சுட்டனர்' என்று தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai