சுடச்சுட

    

    ஜெர்மனி விமான நிலைய சோதனையில் இந்தியப் பெண் அவமதிப்பு: அறிக்கை கோரினார் சுஷ்மா

    By DIN  |   Published on : 02nd April 2017 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரில் இருந்து ஐஸ்லாந்து சென்ற பெண்ணிடம் ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் ஆடையை களையக் கோரி சோதனை செய்ததாக புகார் எழுந்துள்ளது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுள்ளார்.
    ஸ்ருதி பஸப்பா என்ற பெண் தனது 4 வயது மகளுடன் பெங்களூரில் இருந்து கடந்த புதன்கிழமை ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நகர் வழியாக ஐஸ்லாந்து சென்றார்.
    அப்போது, ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் அவர் வழக்கமான சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். மேலும், தனி அறைக்கு அழைத்து சென்று உடையை அவிழ்க்கக் கோரி சோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக தனது முகநூல் (ஃபேஸ்புக்) பதிவில் ஸ்ருதி புகார் தெரிவித்துள்ளார்.
    இதையடுத்து, இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதருக்கு சுஷ்மா ஸ்வராஜ் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai