சுடச்சுட

  

  நாடு முழுவதும் பிஎஸ்-4 தர எரிபொருள் விற்பனை: தொடங்கிவைத்தார் பிரதான்

  By DIN  |   Published on : 02nd April 2017 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Dharmendra-pradhan

  சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏதுவான, குறைந்த மாசுவை வெளியேற்றும் எரிபொருள்களை விநியோகிப்பதன் மூலம் காற்று மாசு அளவை கணிசமாகக் குறைக்கும் நோக்கில், நாடு முழுதும் பிஎஸ்-4 தர எரிபொருளின் விற்பனையை மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேசுவரத்தில் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
  ஒடிஸா தனி மாநிலமாக உருவான "உத்கல் தினம்' சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி இந்தப் புதிய ரக எரிபொருள் விற்பனையைத் தொடங்கிவைத்த பிரதான், மாசு அளவைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சி, ஒரு புதிய யுகத்தின் தொடக்கம் என்றார்.
  நிகழ்ச்சியில் அவர் பேசியது:
  இந்தப் புதிய யுக போக்குவரத்து எரிபொருள்களின் விற்பனையைத் தொடங்குவதன் மூலம் காற்றில் மாசுவின் அளவு கணிசமாகக் குறைக்கப்படும். இதன் மூலம் நாட்டின் 125 கோடி குடிமக்களும் பலன் பெறுவர்.
  சுற்றுச்சூழலை பெரிய அளவில் மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. இருந்தபோதும், பிஎஸ்-4 தர எரிபொருளுக்கு மாறுவது என்பது மாசுவின் அளவைக் குறைப்பதற்காகத்தான். தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் பிஎஸ்-4 தர எரிபொருளை வரும் 2020 ஏப்ரல் 1-ஆம் தேதி வாக்கில் உலகத் தரத்துக்குக் கொண்டு வருவதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.
  பெட்ரோலிய அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பஹல், சமையல் எரிவாயு மானியத்தைக் கைவிடும் திட்டம், பிரதமர் சமையல் எரிவாயுத் திட்டம் ஆகிய சமூக பொருளாதார நலத் திட்டங்கள் யாவும் மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கின்றன என்றார் பிரதான்.
  ஆந்திரம், தமிழகம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்தப் புதிய ரக எரிபொருள் விற்பனையை அவர் காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai