சுடச்சுட

  

  நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலை: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  By DIN  |   Published on : 02nd April 2017 06:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  ஸ்ரீநகர்: நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று ஞாயிற்றுக்கிழ்மை ஸ்ரீநகரில் திறந்து வைத்தார்.

  காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.28 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.

  ரூ3,720 கோடி செலவில் உருவான செனானி - நஷ்ரியை இணைக்கும் நாட்டிலேயே மிக நீளமான இந்த சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.  மட

  இந்த பாதை மூலம், ஜம்மு - ஸ்ரீநகர் இடையேயான பயண தூரம் 31 கி.மீட்டராக குறைக்கப்படும். மேலும், பயண நேரமும் 2 மணி நேரம் அளவுக்கு குறையும். இந்த பாதையால் தினமும் ரூ.27 லட்சம் அளவுக்கு எரிபொருள் சேமிக்கப்படும்.

  கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாதவாறு வகையிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தாங்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் இச்சுரங்க சாலை கட்டப்பட்டுள்ளது.

  இந்த திட்டத்துக்கு 2011-ம் ஆண்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டினார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு விட திட்டமிட்டு இருந்தது. ஆனால் பல காரணங்களால் பணிகள் தடைபட்டன. தற்போது பணிகள் நிறைவடைந்து இன்ற திறந்து வைக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai