சுடச்சுட

    

    நான் "கபாலி' படத்தின் ரசிகன்: மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்

    By DIN  |   Published on : 02nd April 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "நான் கபாலி படத்தின் ரசிகன். அதன் இரண்டாவது பாகம் மலேசியாவில் எடுக்கப்படுவதைக் காண காத்திருக்கிறேன்' என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.
    ஆறு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் தனது பயணத்தை சென்னையில் இருந்து தொடங்கினார். அங்கு அவர் கபாலி படத்தின் நாயகன் ரஜினியைச் சந்தித்து, ஒரு சாதாரண ரசிகரைப் போல் கைப்படங்களை (செல்ஃபி) எடுத்துக் கொண்டார்.
    அதன் பின் நஜீப் ரசாக் சனிக்கிழமை தில்லி சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    மலாயா மொழியானது ஏராளமான வார்த்தைகளை சம்ஸ்கிருதத்தில் இருந்து பெற்றுள்ளது. இங்குள்ள உணவையும் நாங்கள் ருசிக்கிறோம்.
    தமிழ்ப் படங்களின் பெரிய ரசிகன் நான். நான் சென்னைக்கு சென்றுள்ளேன். கபாலி படத்தின் இரண்டாவது பாகம் மலேசியாவில் எடுக்கப்படுவதைக் காண காத்திருக்கிறேன் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai