சுடச்சுட

  

  திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
  திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனைத்து பக்தர்களும் ஏழுமலையான் ஆர்ஜித சேவையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், திருமலையில் சுமார் இரண்டாண்டுகளாக குலுக்கல் முறையில், நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விவரங்களை தேவஸ்தானம் சனிக்கிழமை வெளியிட்டது.
  இந்த டிக்கெட்டுகளைப் பெற பக்தர்கள், சேவை தேதியின் முன்தினம் திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் தரிசனத்துக்குச் செல்பவரின் பெயர், செல்லிடப்பேசி எண், முகவரி உள்ளிட்டவற்றை அளித்து பெருவிரல் ரேகை பதிவு மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு அதிகாரிகள் குலுக்கல் முறையில் விண்ணப்பங்களை தேர்ந்தெடுத்து சம்பந்தப்பட்டவரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அளிப்பர். தகவல் பெற்றவர்கள் மத்திய விசாரணை அலுவலகத்துக்குச் சென்று பணம் அளித்து டிக்கெட் பெற்றுக் கொண்டு மறுநாள் காலை ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.

  நிலுவையில் உள்ள டிக்கெட்டுகளின் விவரங்கள்

  ஏப்ரல் 4 தோமாலை 4, அர்ச்சனா 12,
  ஏப்ரல் 5 அர்ச்சனா 14,
  ஏப்ரல் 6 அர்ச்சனா 13, தோமாலை 4,
  ஏப்ரல் 7 மேல்சாட் வஸ்திரம் 3, பூராபிஷேகம் 11,
  ஏப்ரல் 12 தோமாலை 2, அர்ச்சனா 5,
  ஏப்ரல் 13 அர்ச்சனா 7,
  ஏப்ரல் 14 மேல்சாட் வஸ்திரம் 2, பூராபிஷேகம் 3,
  ஏப்ரல் 18 தோமாலை 10, அர்ச்சனா 8,
  ஏப்ரல் 19 அர்ச்சனா 11,
  ஏப்ரல் 21 மேல்சாட் வஸ்திரம் 3, பூராபிஷேகம் 5,
  ஏப்ரல் 25 அர்ச்சனா 11,
  ஏப்ரல் 26 அர்ச்சனா 12,
  ஏப்ரல் 27 அர்ச்சனா 20
  ஏப்ரல் 28 மேல்சாட் வஸ்திரம் 1, பூராபிஷேகம் 9.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai