சுடச்சுட

    

    பிரதமர் மோடி சார்பாக அஜ்மீர் தர்காவுக்கு பட்டுப்போர்வை அன்பளிப்பு

    By DIN  |   Published on : 02nd April 2017 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமர் நரேந்திர மோடி சார்பில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் தர்காவுக்கு பட்டுப்போர்வை அளிக்கப்பட்டது.
    12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சூஃபி துறவி குவாஜா மொய்னுதீன் சிஸ்தி. அவரது நினைவிடம் அஜ்மீரில் அமைந்துள்ளது.
    அவரது நினைவாக அஜ்மீர் தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறது.
    இந்த ஆண்டு நடைபெறும் 805-ஆவது சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி சார்பில் அஜ்மீர் தர்காவுக்கு பட்டுப்போர்வை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் போர்வையை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, அஜ்மீர் தர்காவில் சனிக்கிழமை அளித்தார்.
    அப்போது பிரதமர் சார்பில் அளிக்கப்பட்ட செய்தியை முக்தார் அப்பாஸ் நக்வி படித்தார். அதில், "இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியத்தின் சிறந்த அடையாளமாக குவாஜா மொய்னுதீன் சிஸ்தி திகழ்கிறார்' என்று மோடி புகழ்ந்துள்ளார்.
    தொடர்ந்து, முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், "ஏழைகளின் புரவலராகத் திகழ்ந்தவர் சிஸ்தி; உலக சமாதானம் குறித்த அவருடைய செய்தியானது மனிதகுலத்தின் நன்னெறிப் பண்புகளைக் காக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai