சுடச்சுட

  

  மகாராஷ்டிர அரசு ஊழியர்களைத் தாக்குவோருக்கு தண்டனையை அதிகரிக்கும் மசோதா

  By DIN  |   Published on : 02nd April 2017 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு ஊழியர்களைத் தாக்குவோருக்கு அளிக்கப்படும் தண்டனையை அதிகரிக்க வழிசெய்யும் வகையில், மகாராஷ்டிர சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  மகாராஷ்டிரத்தில் அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது அவர்களைத் தாக்குவோருக்கு தற்போது 3 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. இதை 5 ஆண்டுகளாக அதிகரிக்க வழிசெய்யும் புதிய மசாதாவை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மாநில சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
  இதன் மீதான விவாதம் பேரவையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜகவைச் சேர்ந்த ஆஷிஷ் ஷேலார் பங்கேற்றுப் பேசியதாவது:
  புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி, அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்புண்டு.
  மேலும், இதுதொடர்பாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் மட்டுமே ஜாமீன் பெற முடியும்.
  கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக 17,682 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதன் காரணமாகவே தண்டனையைக் கடுமையாக்கும் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  அவ்வாறெனில், மாநிலத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்களைத் தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. மேலும், இந்தக் குற்றங்களுக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதா? என்று அவர் கேள்வியெழுப்பினார்.
  சிவசேனையைச் சேர்ந்த சந்திரதீப் நார்கே பேசுகையில், "இந்த மசோதாவில் காணப்படும் குறைகளைப் போக்குவதற்காக, இதை இரு அவைகளின் கூட்டுத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்' என்றார். அவருக்கு ஆதரவாக, சிவசேனையின் பிற உறுப்பினர்களும் குரலெழுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai