சுடச்சுட

  

  மதுபோதையில் மத்திய அமைச்சரின் காரை விரட்டிய மாணவர்கள் ஜாமீனில் விடுதலை

  By DIN  |   Published on : 02nd April 2017 09:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுதில்லி: மதுபோதையில் மத்திய அமைச்சரின் காரை விரட்டி வந்ததாக தில்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மணவர்கள் 4 பேரும் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி தில்லி லுட்யென்ஸ் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை மற்றொரு கார் மிக வேகமாக துரத்துவதை கண்ட ஸ்மிருதி இரானியின் பாதுகாவலர்கள், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு தகவல் அளித்தனர்.

  வேகமாக வந்த அந்த காரை அமெரிக்க தூதரக அலுவலகம் அருகே சுற்றி வளைத்த ரோந்து போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆனந்த் சர்மா, அவினாஷ், குணால் மற்றும் சிதன்சு ஆகிய நான்கு மாணவர்களும் தில்லி பல்கலைக்கழகத்தின் தென் வளாகத்தில் உள்ள ஒரு கல்லூரி அறிவியல் துறையில் இளங்கலை பயின்று வருகிறார்கள் என்பதும், அவர்கள் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

  இதையடுத்து காவல் நிலையத்தில் இரவு முழுக்க காவலில் வைக்கப்பட்ட மாணவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
  மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானியிடம் மாணவர்கள் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

  தங்களது செயலுக்காக மாணவர்கள் மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai