சுடச்சுட

  

  ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித் துறை அதிகாரி கைது

  By DIN  |   Published on : 02nd April 2017 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள மாநிலம், கொச்சியில் மருத்துவரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை லஞ்சமாக வாங்கிய வருமான வரித் துறை அதிகாரியை சிபிஐ கைது செய்தது.
  கொச்சியைச் சேர்ந்த சபீன் என்பவரின் மருத்துவமனையில் வருமான வரித் துறையில் ஆய்வாளராக பணிபுரியும் தினேஷ் என்பவர் சோதனை நடத்தியுள்ளார். அப்போது மருத்துவமனை ஆவணங்களில் சில முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை கண்டுபிடித்திருப்பதாகவும், இதை மறைப்பதற்கு தனக்கு ரூ.10 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்றும் தினேஷ் கேட்டுள்ளார். ஆனால் சபீன் தன்னிடம் ரூ.10 லட்சம் இல்லை என்று தெரிவிக்கவே, அந்தத் தொகையை ரூ.5 லட்சமாக தினேஷ் குறைத்துள்ளார்.
  இதுகுறித்து சிபிஐயிடம் சபீன் புகார் அளித்தார். சிபிஐயின் ஆலோசனைப்படி, தினேஷிடம் சபீன் ரூ.5 லட்சத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது தினேஷை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப் பணம் ரூ.5 லட்சத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai