சுடச்சுட

  

  விசைத்தறித் துறை மேம்பாட்டுக்கு 30% மானியம் அதிகரிப்பு: மத்திய அரசு

  By DIN  |   Published on : 02nd April 2017 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விசைத்தறித் துறை மேம்பாட்டுக்கான மானியம், 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
  நாடு முழுவதுமுள்ள விசைத்தறி கூடங்களின் மேம்பாட்டுக்கான மத்திய அரசின் விரிவான திட்டமான "பவர்டெக்ஸ் இந்தியா' திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
  மகாராஷ்டிர மாநிலம், பிவான்டியில் நடைபெற்ற விழாவில், இத்திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
  "டெக்ஸ் இந்தியா' திட்டம், சிறு விசைத்தறியாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும். இத்திட்டத்தின் பயன்கள், ஏப்ரல் மாதம் முதல் விசைத்தறியாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  விசைத்தறி துறை மேம்பாட்டுக்கான மானியத்தை, மத்திய அரசு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், "முத்ரா' திட்டத்தின்கீழ் விசைத்தறியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், இந்திய சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கியின்கீழ் கடன்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  அதேபோல், சூரியமின் சக்திக்கு மாறும் விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்றார் ஸ்மிருதி இரானி.
  நிகழ்ச்சியின்போது, "பவர்டெக்ஸ் இந்தியா' திட்டம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கான உதவி எண்ணை, ஸ்மிருதி இரானியும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸýம் தொடங்கி வைத்தனர்.
  மேலும், தமிழகத்தின் ஈரோடு, குஜராத்தின் சூரத், பிகாரின் பகல்பூர், கர்நாடகத்தின் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி துறையினருடன் காணொளி காட்சி முறையில் ஸ்மிருதி இரானி கலந்துரையாடினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai