சுடச்சுட

  
  pranab

  "மாணவச் சமுதாயத்தினரிடம் விவாதம் என்பது ஏற்புடையது; சகிப்பின்மை ஏற்கத்தக்கதல்ல' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
  மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிலையத்தின் 52-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  இதில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
  அப்போது, அவர் பேசியதாவது: நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தான் நவீன இந்தியாவை உருவாக்கியவர். சுதந்திரமான வாதம், விவாதங்களைப் புரிவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதில் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
  "இந்தியன் என்பவன் விவாதம் புரிபவனாக இருக்கலாம். ஆனால் சகிப்புத் தன்மையற்றவனாக இருக்கக் கூடாது' என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் ஒருமுறை தெரிவித்துள்ளார். இதை, மாணவர்கள் தங்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.
  பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கணக்கான கருத்துகள் உதயமாகும். அவை தொடர்பாக விவாதங்கள் இருக்கலாம். ஆனால், மோதல் கூடாது.
  உயர் கல்வியைப் பொருத்தவரை கல்வி கற்கும் சூழலானது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வன்முறைக்கு இடமளிப்பதாக அமையக் கூடாது.
  பிற கல்விப் பிரிவுகளைப் போல் அல்லாமல், மேலாண்மைக் கல்வியை நாடு சந்தித்து வரும் சமூக - பொருளாதார பிரச்னைகளுடன் தொடர்புபடுத்தாமல் இருக்க முடியாது. அறிவுத் திறனும், சமூக அக்கறையும் கொண்ட தொழில் நிபுணர்கள் நாட்டின் தலைமைத்துவத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதோடு அல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக நிற்க வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai