சுடச்சுட

  

  ஹிமாசல் முதல்வர் மீதான குற்றப்பத்திரிகை: சிறப்பு நீதிமன்றம் நாளை பரிசீலனை

  By DIN  |   Published on : 02nd April 2017 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சொத்துக் குவிப்பு வழக்கில் ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது.
  வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக வீரபத்ர சிங், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
  இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ அமைப்பு, ஹிமாசலப் பிரதேச முதல்வர் உள்பட 9 பேருக்கு எதிராக வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
  சுமார் 500 பக்கங்கள் கொண்ட அந்தக் குற்றப் பத்திரிகையில், வீரபத்ர சிங், அவரது மனைவி ஆகியோர் வருமானத்தைக் காட்டிலும் 192 சதவீதம் அதிகமாக சொத்துகள் வாங்கியதாகக் குறிப்பிடப்பட்
  டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai