சுடச்சுட

    

    ஃபதேபூர்: உத்திரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 42 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
    இதுகுறித்து ஃபதேபூர் மாவட்ட காவல்துறை அதிகாரி உமேஷ் குமார் சிங் கூறியதாவது:
    உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் ஜஹனாபாத் நகரில் உள்ள தொழிற்சாலையின் குளிர்பதன கிடங்கில் இருந்த பைப்பில் ஏற்பட்ட உடைப்பால் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து தொழிற்சாலை அருகில் குடியிருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். மேலும் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலைக்குள் சிக்கியிருந்த 42 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
    தற்போது அமோனியா வாயு கசிவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai