சுடச்சுட

  

  கருப்புப் பணம்: ஸ்விட்சர்லாந்திடம் கூடுதல் விவரங்களைக் கேட்டது இந்தியா

  By DIN  |   Published on : 03rd April 2017 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  blackmoney

  கருப்புப் பணத்தை வெளிக்கொணரும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, மேலும் 10 இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை ஸ்விட்சர்லாந்து அரசிடம் இந்தியா கேட்டுள்ளது.
  இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
  கணக்கில் காட்டப்படாத தொகையை சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், கலைப்பொருள் காப்பாளர் ஒருவர் மற்றும் அவரது தரைவிரிப்பு ஏற்றுமதி நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என 10 பேரது வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்குமாறு ஸ்விட்சர்லாந்திடம் இந்திய அரசு கோரியுள்ளது.
  இதுகுறித்து 30 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு ஸ்விட்சர்லாந்து வரித் துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர், பனாமா ஆவணக் கசிவு விவகாரத்தில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  ஸ்விட்சர்லாந்து நாட்டுச் சட்டப்படி, வெளிநாட்டில் வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த விவரங்களை அந்தந்த நாடு அரசுகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்க கடைசி வாய்ப்பு வழங்கப்படும்.
  ஏற்கெனவே, இதே போன்ற விவரங்களை ஸ்விட்சர்லாந்து அரசிடம் இந்தியா கோரியிருந்தாலும், தற்போது அத்தகைய கோரிக்கைகளின் தீவிரம் அதிகரித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai