சுடச்சுட

  

  காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண அரசியல் முயற்சி அவசியம்: ஃபரூக் அப்துல்லா

  Published on : 03rd April 2017 04:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  17paruk

  ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் ரீதியிலான முயற்சி எடுக்கப்படுவது அவசியம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
  ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில், தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளராக ஃபரூக் அப்துல்லா போட்டியிடுகிறார். இதையொட்டி, ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தால் ஏரி, ஹஜ்ரத்பால் பகுதிகளில் ஃபரூக் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
  பொருளாதாரம், உள்கட்டுமானம் ஆகியவற்றில் வளர்ச்சி அவசியம். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, நீண்டகாலமாக இருக்கும் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு அரசியல் ரீதியிலான முயற்சியை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாநிலம் தொடர்ந்து பாதிக்கப்படும்.
  செனானி-நஸ்ரி இடையேயான சுரங்கப் பாதை, அரசியல் ரீதியிலான முயற்சிக்கு மாற்றாக சித்திரிக்கப்படுகிறது. இதன்மூலம், காஷ்மீர் அரசியல் பிரச்னையை மூடிமறைக்கும் மற்றொரு செயல் வெளிப்பட்டுள்ளது என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.
  நாட்டிலேயே மிகநீண்ட தூர சுரங்கப் பாதையாக கருதப்படும் செனானி-நஸ்ரி சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்நிலையில், ஃபரூக் அப்துல்லா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai