சுடச்சுட

  

  குஜராத்தில் மோடி அரசு விதிகளை மீறவில்லை: நீதிபதி எம்.பி.ஷா

  By DIN  |   Published on : 03rd April 2017 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shsh

  குஜராத் மாநிலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விதிமுறைகளை மீறவில்லை என்று நீதிபதி எம்.பி.ஷா கூறினார்.
  குஜராத் மாநிலத்தில் டாடா நேனோ கார் தயாரிப்புத் தொழிற்சாலை, அதானி குழுமத்துக்கு துறைமுகம், சிறப்புப் பொருளாதார மண்டலம், எல் அன்ட் டி நிறுவனம் ஆகியவற்றுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு நிலங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்த மோடிக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரி, குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் புகார்கள் கொடுத்தனர். அதையடுத்து, இதுதொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி,ஷா தலைமையிலான குழுவை மோடி நியமித்திருந்தார்.
  அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை, குஜராத் சட்டப் பேரவையில் மார்ச் 31-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், அரசுக்கு எதிராகக் கூறப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகள், ஆதாரமற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதனிடையே, ஆமதாபாதில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நீதிபதி எம்.பி.ஷா ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், "விசாரணை அறிக்கையை முழுமையாகப் படித்தால், நிலம் ஒதுக்கீடு செய்ததில் அனைத்து சட்ட விதிகளையும் குஜராத் அரசு பின்பற்றியது தெரியவரும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai