சுடச்சுட

    

    சிஆர்பிஎஃப் வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி: விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

    By DIN  |   Published on : 03rd April 2017 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    CRPF

    கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை இரவு உணவு சாப்பிட்ட பிறகு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 168 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை விசாரணைக்கு அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
    இதுகுறித்து சிஆர்பிஎஃப் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    திருவனந்தபுரம் அருகே பள்ளிபுரம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் சனிக்கிழமை இரவு 7.15 மணியளவில் உணவருந்திய பிறகு சுமார் 168 வீரர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 50 வீரர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சியுள்ள வீரர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சை பெற்று முகாமுக்கு திரும்பினர்.
    முதல்கட்ட விசாரணையில் மீன் பொறியல் சாப்பிட்ட பிறகுதான் வீரர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மீன்கள் அனைத்தும் அருகில் உள்ள சந்தையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை 8 தினங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
    முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்களை அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai