சுடச்சுட

  

  செயற்கைக்கோள் தயாரிப்பில் தனியாருடன் கைகோத்தது இஸ்ரோ

  By DIN  |   Published on : 03rd April 2017 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  isro

  தனியார் துறையின் பங்களிப்புடன் செயற்கைக்கோள்களைத் தயாரிக்க இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.
  30 ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ, இப்போதுதான் முதல் முறையாக தனியார் துறையுடன் கைகோக்கிறது.
  இதன்படி பெங்களூரைச் சேர்ந்த ஆல்ஃபா டிசைனிங் டெக்னாலஜீஸ் நிறுவனம் இரு வழிகாட்டும் செயற்கைக்கோள்களைத் தயாரிக்க உள்ளது.
  அந்த நிறுவனம் ஏற்கெனவே சிறப்பான தொழில்நுட்பத்தில் அமைந்த பாதுகாப்புக் கருவிகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்திடம் இஸ்ரோவின் முதல் தனியார் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  அந்த நிறுவனத்தின் 70 பொறியாளர்கள் கொண்ட குழு அடுத்த 6 மாதத்தில் இரு செயற்கைக்கோள்களை தயாரிக்க இருக்கிறது. இதற்காக ரூ.400 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  இது குறித்து ஆல்ஃபா நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது: ஒரு செயற்கைக்கோளை ஒருங்கிணைந்து, வடிவமைத்து, அதனை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்ப்பது என்பது இந்தியாவில் தனியார் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலான விஷயம்தான். எனினும், இப்பணியை வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்றார் அவர்.
  இஸ்ரோவின் பெங்களூர் செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இது குறித்துக் கூறியதாவது:
  இந்தியாவுக்கு தேவைப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கைக்கும், இஸ்ரோவின் செயற்கைக்கோள் உற்பத்தித் திறனுக்கும் இடைவெளி உள்ளது. கூடுதலாகத் தேவைப்படும் செயற்கைக்கோள்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற முடிவு செய்துள்ளோம். இப்போது இஸ்ரோ அமைப்பு ஆண்டுக்கு 16 முதல் 17 செயற்கைக்கோள்களை தயாரித்து வருகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai