சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். 15 போலீஸôர் படுகாயமடைந்தனர்.
  ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள நௌஹட்டா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸôர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு காரில் வந்த பயங்கரவாதிகள் அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த போலீஸôர் மீது கையெறி குண்டுகளை வீசினர்.
  இந்த தாக்குதலில் 16 போலீஸôர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
  இதில் சிகிச்சைப் பலனின்றி ஷமீன் அகமது (37) என்ற காவலர் உயிரிழந்தார். மற்ற அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து நௌஹட்டா போலீஸôர் வழக்குப் பதிவு செய்து பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai