சுடச்சுட

  

  தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள கல்வி, மருத்துவம், புனிதச் சுற்றுலா போன்ற சேவைகளுக்கு, புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பிலிருந்தும் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
  இதுகுறித்து மத்திய வருவாய்ச் செயலர் ஹாஸ்முக் ஆதியா கூரியதாவது:
  ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, இதுவரை வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்த பொருள்களையும், சேவைகளையும் வரிவட்டத்துக்குள் கொண்டு வந்து மக்களுக்கு அதிர்ச்சியளிக்க மத்திய அரசு விரும்பவில்லை.
  எனவே, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை ஜிஎஸ்டி வரிவிதிப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசு கூறியது.
  அதுமட்டுமன்றி, போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளையும் ஜிஎஸ்டியில் தொடர வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது என்றார் அவர்.
  தற்போது, வரி விதிப்புக்குட்படாத 17 சேவைகள், ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்தும் விலக்கு பெறும் சேவைகளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai