சுடச்சுட

  

  சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
  காங்கோ நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்திய தொழிலக கூட்டமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர் ஜிஎஸ்டி குறித்து மேலும் கூறியதாவது:
  ஜுலை 1-ஆம் தேதி முதல் 100 சதவீதம் உறுதியாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்துவிடும். கடைசியாக நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 4 விதிகளின் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஸ்ரீநகரில் மே 18,19-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. ஜிஎஸ்டி குறித்து வர்த்தகம் மற்றும் தொழில் துறையினர் எழுப்பியுள்ள சந்தேகங்கள் அனைத்தும் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai