சுடச்சுட

  

  திறன் மேம்பாட்டுப் பயிற்சியால் மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்: பிரணாப் முகர்ஜி

  By DIN  |   Published on : 03rd April 2017 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  puja

  ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கர் நகரில் உள்ள பாபா வைத்தியநாதர் சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

  இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதன் மூலமாக மட்டுமே நாட்டில் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார்.
  மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பிபிஓ இந்தியா' உள்ளிட்ட துணைத் திட்டங்களுக்காக 35 திறன் மேம்பாட்டு மையங்களை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
  இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும் வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது இன்றளவும் பெரிய சவாலாகவே உள்ளது. பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவது கடினமானதுதான்.
  ஆனால், இதற்கு ஒரே ஒரு தீர்வு, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது மட்டுமே. நம் நாட்டில் 50 சதவீதத்துக்கும் மேல் இளைஞர்கள் உள்ளனர். எனவே, அவர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதே வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும்.
  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த இலக்கை நோக்கியே பயணித்து வருகிறது. "டிஜிட்டல் இந்தியா', "திறன்மிகு இந்தியா' போன்ற இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான திட்டங்களில் பிரதமர் கவனம் செலுத்தி வருவது பாராட்டுக்குரியது என்றார் பிரணாப் முகர்ஜி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai