சுடச்சுட

  

  தொழில்முறை சேவை: எம்.பி.க்களுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

  By DIN  |   Published on : 03rd April 2017 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sc

  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறை சேவைகள் அளிப்பதற்குத் தடை விதிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  நீதிபதிகள் தொழிலதிபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைப் போல, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொழில்முறைச் சேவைகளை அளிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, வழக்குரைஞரும், பாஜக செய்தித் தொடர்பாளருமான அஷ்வினி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
  அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.எஸ். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது: மருத்துவம் படித்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரிகளானவர்கள், பொறியியல் படித்துவிட்டு தூதரக அதிகாரிகளானவர்கள் ஆகியோரால் ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ சேவையளிக்க முடிவதில்லை.
  இந்தச் சூழலில், எம்.பி.க்கள் மட்டும் தங்களது தொழில்முறை சேவைகளைத் தொடர்ந்து வழங்குவது குறித்த மனுதாரரின் கேள்வியில் நியாயம் இருக்கலாம்.
  ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின்படி இந்த விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai