சுடச்சுட

  

  நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜிண்டால் குழுமத் தொழிலதிபரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவீன் ஜிண்டால், வெளிநாடு செல்வதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியது.
  ஜார்க்கண்ட் மாநிலம், அமர்கொண்டா நிலக்கரி சுரங்கம் ஜிண்டால் ஸ்டீல் குழுமத்துக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜிண்டால் குழுமத் தலைவர் நவீன் ஜிண்டால் உள்பட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
  இந்த நிலையில், தொழில் நிமித்தம் இந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் இத்தாலி சென்று வர நவீன் ஜிண்டால் சார்பில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை சனிக்கிழமை ஏற்றுக் கொண்ட நீதிபதி பரத் பராசர், நவீன் ஜிண்டால் வெளிநாடு சென்று திரும்ப அனுமதி வழங்கினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai