சுடச்சுட

  

  நெசவாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவக் காப்பீடு: மத்திய அரசு பரிசீலனை

  By DIN  |   Published on : 03rd April 2017 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  esi

  கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கும், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இ.எஸ்.ஐ.சி.) மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
  இந்தத் திட்டத்தினால், நெசவாளர்கள் ஒரு கோடி பேரும், அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் சுமார் 3 கோடி பேரும் மருத்துவக் காப்பீடு பெறுவார்கள்.
  இ.எஸ்.ஐ-யின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நெசவாளர்களுக்கும் கொண்டு வருவது குறித்து உத்தேசித்து வருவதாக மத்திய தொழிலாளர்கள் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, நாடாளுமன்றத்திலும், நெசவாளர்களின் நிகழ்ச்சியொன்றிலும் கூறியிருந்தார்.
  இந்நிலையில், இந்தத் திட்டத்தை விரைவில் கொண்டுவரக் கோரி, தத்தாத்ரேயாவுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆனந்த பாஸ்கர் ராபோலு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இ.எஸ்.ஐ. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆகியோருக்கும் கொண்டு வருவதை மத்திய அமைச்சர் விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார்.
  இ.எஸ்.ஐ. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது 2 கோடி பேர் பயன்பெறுகிறார்கள். கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் இ.எஸ்.ஐ.-யின் மருத்துவக் காப்பீட்டு வழங்கப்பட்டால், மொத்தம் 8 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai