சுடச்சுட

  

  பதினேழு வயது கேரள சிறுவனுக்கு பாலியல் தொல்லை:அழகு நிலைய பெண் ஊழியர் கைது!

  By PTI  |   Published on : 03rd April 2017 03:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kerala_boy

   

  கோட்டயம்: முகநூல் மூலம் அறிமுகமான பதினேழு வயது கேரள சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அழகு நிலைய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் விபரம் வருமாறு:

  பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் மூலமாக அழகு நிலைய ஊழியரான அந்த பெண் என்னுடைய 17 வயது மகனுக்கு அறிமுகமானார்.இந்த நட்பின் காரணமாக கடந்த சனிக்கிழமைஅன்று இரவு கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதியில் உள்ள ராமாபுரத்தில் அமைந்துள்ள எங்கள் வீட்டுக்கு அந்த  பெண் வந்தார். என்னுடைய மகனின் அறைக்கு அவர் சென்றவுடன் இருவரும் அறைக்கதவை தாழிட்டு கொண்டனர்.

  பின்னர் நாங்கள் எவ்வளவோ சத்தமிட்டும் அவர்கள் கதவினை திறக்கவில்லை. அதனைத் தொடர்ந்து எங்களின்  உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் சத்தமிட்டும் அவர்கள் கதவினை திறக்கவில்லை. அத்துடன் உள்ளே வந்தால் தற்கொலை செய்து கொண்டு விடுவதாகவும் அவர் மிரட்டினார். இறுதியில் போலீஸார் வந்து கதவை உடைத்து திறந்து அவர்களை மீட்டனர்.  பின்னர் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

  தங்களது மகனை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த சிறுவனின் பெற்றோர் புகார் செய்ததாலும், அந்த சிறுவன் 'மைனர்' என்பதாலும் அந்த பெண் மீது, 'பாலியல் குற்றங்களில் இருந்து குழுந்தைகளை காக்கும் சட்டம் (போஸ்கோ) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் நீதிமன்றமானது அந்த பெண்னை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டது.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai