சுடச்சுட

  

  ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்திலுள்ள சிறையில் கைதிகளிடமிருந்து 14 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரியொருவர் கூறியதாவது:
  பாராமுல்லா கிளைச் சிறையில், கைதிகள் சிலர் அனுமதியின்றி செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸாரும், சிறைத் துறை நிர்வாகிகளும் அந்தச் சிறையில் சோதனை மேற்கொண்டனர்.
  இதில், 14 செல்லிடப்பேசிகளும், சில ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறை வழிகாட்டி நெறிமுறைகளை மீறும் வகையில், இந்தப் பொருள்கள் சிறைக்குள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
  மேலும், சிறையில் செல்லிடப்பேசிகளை வைத்திருந்தது தொடர்பாக 12 கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai