சுடச்சுட

  
  YogiAdityanath

  உத்தரப் பிரதேச புதிய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.4) நடைபெறவுள்ளது.
  உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எம்.பியுமான யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதல்வராக கடந்த மாதம் 19-ஆம் தேதி பதவியேற்றார்.
  முதல்வராகப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு புதிய அறிவிப்புகளையும், அதிரடி முடிவுகளையும் யோகி ஆதித்யநாத் எடுத்து வருகிறார். குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் அனுமதியின்றி நடத்தப்படும் இறைச்சிக் கூடங்களை மூடும் உத்தரவு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பிரத்யேக காவல் பிரிவு அமைத்தது ஆகியவை அவற்றுள் அடங்கும்.
  இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த விவசாயக் கடன்கள் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
  எனினும், மாநிலத்தில் விவசாயக் கடன்கள் மட்டும் சுமார் ரு.62 ஆயிரம் கோடி அளவுக்கு இருப்பதால் அவற்றை உடனடியாக தள்ளுபடி செய்வதன் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai