சுடச்சுட

  

  ராஜ்தானி உள்ளிட்ட ரயில்களில் தீ எச்சரிக்கை கருவி பொருத்த முடிவு

  By DIN  |   Published on : 03rd April 2017 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  train

  ராஜ்தானி உள்ளிட்ட ரயில்களில் தீ முன்னெச்சரிக்கை கருவியைப் பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
  ரயில் பயணத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில் விபத்துகளைத் தடுக்கவும் ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ராஜ்தானி மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் தேஜஸ் ரயில்களில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தீ முன்னெச்சரிக்கை கருவிகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  இந்தக் கருவிகள் தீ பிடிப்பதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து ரயிலை நிறுத்தவும், பயணிகள் முன்னெச்சரிக்கையாக செயல்படவும் ஒலியை எழுப்பும். முக்கியமாக, ஏசி வகுப்புப் பெட்டிகளில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டு சிறிதளவு புகை ஏற்பட்டாலும், பெட்டிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெப்பம் அதிகரித்தாலும் இந்த கருவி கண்டறிந்து என்ஜின் டிரைவரையும், பயணிகளையும் எச்சரித்து ஒலி எழுப்பும். இதன் மூலம் ரயில் உடனடியாக நிறுத்தப்படும். இது தவிர ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் அதிநவீன தீயணைப்புக் கருவிகளும் பொருத்தப்படவுள்ளன. இதனை பயணிகளும் எளிதாக பயன்படுத்த முடியும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai