சுடச்சுட

  
  rbi

  ரிசர்வ் வங்கியின் ஆளுநர், துணை ஆளுநர்கள் ஆகியோரின் மாத ஊதியம் இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  அதாவது, ஆளுநரின் அடிப்படை மாத ஊதியம், ரூ.90 ஆயிரத்தில் இருந்து, ரூ.2.5 லட்சமாகவும், துணை ஆளுநர்களின் அடிப்படை மாத ஊதியம், ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  இந்த ஊதிய உயர்வு, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது.
  ரிசர்வ் வங்கியின் ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்ற உர்ஜித் படேல், மாத ஊதியமாக, அடிப்படை ஊதியம்-ரூ.90,000, அகவிலைப் படி- ரூ.1,25,00, இதர படிகள்-ரூ.7,000 என மொத்தம் ரூ.2,09,500-யை பெற்றுக் கொண்டதாக ரிசர்வ் வங்கியின் இணையதளத் தகவல் தெரிவிக்கிறது.
  இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநரின் ஊதியம் தொடர்பாக, அந்த வங்கியிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பிடிஐ செய்தி நிறுவனம், தகவல் கோரியிருந்தது.
  அதற்கு, ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்த வங்கி, கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி பதிலளித்தது.
  மேலும், ஆளுநரின் அடிப்படை மாத ஊதியம், ரூ.2.5 லட்சமாகவும், துணை ஆளுநர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூ.2.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி பதிலளித்தது.
  எனினும், அவர்கள் இதர படிகளுடன் சேர்த்து மொத்த மாத ஊதியமாக எவ்வளவு பெறுவார்கள் என்பதை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை. இருப்பினும், உர்ஜித் படேல், மாத ஊதியமாக, மொத்தம் ரூ.3.70 லட்சம் பெறுவார் என்று தெரிகிறது.
  இதுநாள் வரையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், துணை ஆளுநர்கள் ஆகியோரின் ஊதியமானது, அந்த வங்கிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிற வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் ஊதியத்தைவிடக் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai