Enable Javscript for better performance
விடுமுறைக் காலத்தின்போது 3 அரசியல் சாசன அமர்வுகள்: ஜே.எஸ். கேஹர்- Dinamani

சுடச்சுட

    

    விடுமுறைக் காலத்தின்போது 3 அரசியல் சாசன அமர்வுகள்: ஜே.எஸ். கேஹர்

    By DIN  |   Published on : 03rd April 2017 01:34 AM  |   அ+அ அ-   |    |  

    kher

    கோடை விடுமுறைக் காலத்தின்போது உச்ச நீதிமன்றத்தில் சிறு வழக்குகளை விசாரிக்க 3 அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அலாகாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டுவிழாவில் அவர் பேசியதாவது:
    விடுமுறைக் காலத்தில் நியமிக்கப்படும் அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள், வாரத்தின் 5 நாள்களிலும் வழக்குகளை விசாரித்து, நாளொன்றுக்கு 10 வழக்குகளையாவது தீர்த்து வைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
    அவ்வாறு விரைவாகப் பணியாற்றினால்தான், ஆயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் திருமணப் பிரச்னைகள் போன்ற சிறிய வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
    உச்ச நீதிமன்றத்தில் விடுமுறைக் காலத்தின்போது வழக்குகளை விசாரிக்க தலா ஐந்து நீதிபதிகளைக் கொண்ட மூன்று அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்படும் என்றார் அவர்.
    விடுமுறைக் கால அரசியல் சாசன அமர்வுகளில் ஒன்று, முஸ்லிம்களின் "தலாக்' முறை விவாகரத்து, திருமண விதிமீறல், பலதார மணம் போன்றவை தொடர்பான வழக்குகளை இந்த மாதம் 11-ஆம் தேதி முதல் விசாரிக்கும்.
    மேலும், ஆதார் அட்டை, கட்செவி (வாட்ஸ்அப்) சமூக வலைதளம் போன்றவை தொடர்பான வழக்குகளையும் சுமார் 50 நாள் விடுமுறைக் காலத்தின்போது இந்த அரசியல் சாசன நீதிமன்ற அமர்வுகள் விசாரிக்கும்.
    உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறையின்போது மூன்று அரசியல் சாசன அமர்வுகள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    kattana sevai