சுடச்சுட

  

  விரைவில்  டெபிட், கிரெடிட் அட்டைகள் காணாமல் போகும்: ஆரூடம் சொல்வது ஜோதிடர் அல்ல

  By DIN  |   Published on : 03rd April 2017 03:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  14creditcard


  புது தில்லி: இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பப் புரட்சிக் காரணமாக விரைவில் ஏடிஎம்,டெபிட், கிரெடிட் கார்டுகள் காணாமல் கோகும், ஏடிஎம் இயந்திரங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

  மொபைல்களில் இருக்கும் ஆப்-கள் மூலமாகவும், பயோமெட்ரிக் முறையிலும் பணப்பரிவர்த்தனைகள் நடக்கும் போது கிரெடிட், டெபிட் கார்டுகள் தேவையற்றதாகிவிடும் என்று அவர் கூறுகிறார்.

  இந்திய வளர்ச்சியில் தொழில்நுட்பம் என்பது மிக முக்கிய இடம் வகிக்கிறது என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமிதாப் காந்த் கூறினார்.

  ஏற்கனவே, வங்கிக்குச் சென்று பணப்பரிவர்த்தனை செய்யும் வழக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உதவியால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து, செல்போன் மற்றும் பயோமெட்ரிக் முறையில் பணப்பரிவர்த்தனை எளிதாகும். அப்போது கிரெடிட், டெபிட் கார்டுகளும், ஏடிஎம் இயந்திரங்களும் காணாமல் போகும் என்று பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai