சுடச்சுட

    

    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் பேரணி

    By DIN  |   Published on : 03rd April 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    farmersa

    தலையில் பாதியளவு மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்.

    தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

    விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்கள் நூதனமான முறையில் பல்வேறு போராட்டங்களை கடைப்பிடித்து ஊடகங்கள் மற்றும் அரசின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் இன்றைய நிலையை எடுத்துக் கூறும் வகையில், ஞாயிற்றுக்கிழமை சில விவசாயிகள் தலையில் பாதியளவு மொட்டை அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தில்லியில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பேரணியாகச் சென்ற தில்லியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள்.

    பேரணி: இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற வாசகங்களை ஏந்தியும், விவசாயிகளை காப்பாற்றுங்கள் என முழக்கமிட்டும் தமிழ் இளைஞர்கள் கனாட் பிளேஸ் நாடாளுமன்றச் சாலை தொடக்கத்திலிருந்து ஜந்தர் மந்தர் சாலை வரை ஞாயிற்றுக்கிழமை பேரணியாகச் சென்றனர்.

    இந்தப் பேரணியில் தில்லியைச் சேர்ந்த ஏராளமான தமிழ் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். பேரணியின் இறுதியில் அவர்கள் பிரதமருக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai