சுடச்சுட

    

    காஜியாபாத்: தேசியத் தலைநகர் வலயப் பகுதியான காஜியாபாதில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி, அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த நபர் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். அந்த நபருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாக குறிப்பிட்டுள்ள சிறுமியின் தந்தை, அதன் காரணமாக வீட்டை காலி செய்யுமாறு அந்த நபரிடம் கூறி வந்துள்ளார்.
    இந்நிலையில், அந்தச் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன நிலையில், அவரது சடலம் செங்கல் குவியல்களுக்கு இடையே சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதும், மூச்சுத் திணறி உயிரிழந்ததும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
    இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, புகார் கூறப்பட்டுள்ள நபரை தேடி பிகார் விரைந்துள்ளனர் என்று போலீஸார் கூறினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai