சுடச்சுட

  

  58 ஆண்டுகளுக்குப் பிறகு... தன் ஆருயிர் நண்பருடன் தலாய் லாமாவின் உருக்கமான சந்திப்பு

  Published on : 03rd April 2017 04:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DalaiLama


  குவகாத்தி: 58 ஆண்டுகளுக்கு முன்பு திபெத்தில் இருந்து இந்தியாவுக்குள்  பாதுகாப்பாக வர  உதவிய அசாம் ரைஃபில் படை வீரரான தனது நண்பரை தலாய் லாமா சந்தித்துப் பேசினார்.

  1959ம் ஆண்டு திபெத்தில் இருந்து இந்தியாவுக்கு தலாய் லாமா வந்தபோது, அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருந்தது. அதை எல்லாம் மீறி, அசாம் ரைஃபில் படையைச் சேர்ந்த 7 வீரர்கள்தான், தலாய் லாமாவை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்து வந்தனர்.

  சுமார் 58 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த 7 பேரில் ஒருவரான நரேன் சந்திர தாஸை தலாய் லாமா குவகாத்தியில் நேற்று சந்தித்தார். தன் உயிரைக் காப்பாற்றிய உயிர்த் தோழன் நரேனை சந்தித்த தலாய் லாமா, உணர்ச்சிப் பெருக்கால் திக்கு முக்காடினார். அப்போது நரேனுக்கு வயது வெறும் 19 தான். நரேனை பார்த்ததும் தலாய் லாமா, சல்யூட் அடித்து மரியாதை தெரிவித்தார்.

  தலாய் லாமாவுடனான முதல் சந்திப்பு குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நரேன், அசாம் ரைஃபில் படையில் சேர்ந்து அப்பேது 3 ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. அன்று 1959ம் ஆண்டு மார்ச் 29. திபெத் - இந்திய எல்லையில் ஒரு மிகப்பெரிய விருந்தாளி வரவிருப்பதாகவும், அவரை வரவேற்று பத்திரமாக அழைத்து வருமாறு எங்களுக்கு உத்தரவு வந்தது.

  நாங்கள் 7 பேர் இந்திய எல்லையில், தலாய் லாமாவை வரவேற்று பத்திரமாக அழைத்து வந்தோம். அப்போது, ஆயுதம் தாங்கிய பாதுகாவலராக தலாய் லாமாவுடன் நான் வந்தேன். அவரை பத்திரமாக தவாங்கில் சேர்த்தோம்.

  இன்று நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை வார்த்தையால் சொல்ல இயலாது. முதல் முறை அவர் என்னைப் பார்த்த போது என்னைக் கட்டித்தழுவினார். என் வாழ்க்கையிலேயே அந்த நிமிடம்தான் மிகச் சிறந்த தருணம் என்று கூறி கண் கலங்கினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai